அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

65பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் (02. 08. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அவர்களை பாடப்புத்தகங்களை வாசிக்க செய்தும், அப்போது ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்த தகவல்களை கூறச்சொல்லியும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் (ம) ஆசிரியர்கள் வருகை குறித்தும், அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 4ஆம் வகுப்பில் கணிதம் தொடர்பாக மாணவர்களிடம் கேள்வி கேட்டும், அதற்கான விடைகளை கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பித்தார். அப்போது கேள்விகளுக்கு சரியாக விடையளித்த மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மாணவர்களுக்கு எளிமையான முறையில், புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மதிய உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி