லிப்ஸ்டிக் போட்டால் அபராதம்: புது ரூல்ஸ் போட்ட நாடு

82பார்த்தது
லிப்ஸ்டிக் போட்டால் அபராதம்: புது ரூல்ஸ் போட்ட நாடு
வடகொரியா ஒரு வித்தியாசமான நாடு. அவர்களுக்கென்று தனி சட்டங்களும், கட்டுப்பாடுகளும் உள்ளது. இந்த நிலையில் பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசுவதை அந்த நாடு தடை செய்துள்ளது. வடகொரியாவில் இனி பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூச அனுமதி இல்லை. பெண்கள் சிவப்பு உதட்டுச்சாயம் அணியும் போது அது அனைவரையும் கவரும், நாட்டின் ஒழுக்க விழுமியங்களை இது எரித்துவிடும் என கூறி தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.