ரிஷப் பண்ட்டுக்கு அபராதம்? - கில்கிறிஸ்ட் ஆவேசம்

73பார்த்தது
ரிஷப் பண்ட்டுக்கு அபராதம்? - கில்கிறிஸ்ட் ஆவேசம்
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வீரர் பேட்டிங் செய்யும்போது அவருக்கு எதிராக இஷாந்த் சர்மா வீசிய பந்துக்கு நடுவர் வைட் கொடுத்தார். இதற்கு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ரிவியூ எடுத்தார். அப்போதும், வைட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ரிஷப் பண்ட் போன்ற தேவையற்ற விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி