மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது

78பார்த்தது
மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது
விதிமீறல் புகார் எழுந்ததை அடுத்து பேடிஎம் பேமண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி. பிப். 29-க்குப் பிறகு எந்தவொரு செயல்பாடும் செய்ய முடியாது என கூறியது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் நலன் கருதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பேடிஎம் பேமண்ட் வங்கியை அதன் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்டேக் வழங்குநர்களின் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந்நிலையில், மார்ச் 15க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது.

தொடர்புடைய செய்தி