அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

77பார்த்தது
அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் முனுசாமி என்பவர், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் செவிலியர்கள் இவரின் கை, கால்களை படுக்கையோடு கட்டி வைத்துள்ளனர் . திடீரென கட்டுகளை அவிழ்த்து கொண்ட முனுசாமி, முதலாவது மாடியில் இருந்து அவர் குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி