கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பான மாம்பழ அறுவடை மற்றும் உறையிடும் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி, மாம்பழங்களை பைகளில் உறையிட்டு அறுவடை செய்யும் திறன் கொண்டது. இந்த புதிய கருவி மாம்பழங்களை பைகளில் பாதுகாப்பாக உறையிடுவதோடு, முதிர்ந்த பழங்களை எளிதாக அறுவடை செய்யவும் உதவுகிறது.