இந்தியாவில் ஓராண்டுக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு செயல்வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திர மோடியை அடுத்த பிரதமராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் அதன் எம்.பி.க்கள் ஆதரித்த தினத்தில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.