இந்தியில் ரீமேக் ஆகும் "பரியேறும் பெருமாள்"

85பார்த்தது
இந்தியில் ரீமேக் ஆகும் "பரியேறும் பெருமாள்"
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதாநாயகனாக கதிரும் கதாநாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பா.ரஞ்சித் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. இப்படத்திற்கு தடக் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படம் நவம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி