இந்தியாவில் அனைவராலும் விரும்பக்கூடிய பிரபல சிற்றுண்டியான பானிபூரி நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக் கொண்டே வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் ஒரு ஊழியர் தனது முதுகில் பானிபூரிக்குள் ஊற்றப்படும் மசாலா நீர் நிரம்பிய டேங்க்கை சுமந்து கொண்டு, மற்றொரு கையில் பானிபூரியுடன் வலம் வருகிறார். விருந்தாளிகள் பானிபூரி எடுத்துக் கொண்ட பின் வாட்டர் ஸ்ப்ரே கன் மூலம் மசாலா நீரை பரிமாறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.