தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர் மைம் கோபியின் தாயார் இன்று (செப்டம்பர் 1) காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் மைம் கோபிக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். மைம் கோபி அம்மா, மனைவி, குழந்தைகளுடன் கொளத்தூரில் வசித்து வரும் நிலையில் மைம் கோபியின் தாயார் உடல் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை இவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.