திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இயங்கி வரும் பயணிகள் கம்பி வட ஊர்தி (Rope car) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக எதிர்வரும் 07.10.2024 முதல் 40 நாட்களுக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயங்காது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.