மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகலுக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பு கெடு விதித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், கிராமீன் வங்கி நிறுவனர் முகமது யூனஸை வங்க தேச பிரதமராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் கூறியுள்ளனர்.