எந்தக் கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு அதிகாரம்?

571பார்த்தது
எந்தக் கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு அதிகாரம்?
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது கட்சியினரது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, எந்தக் கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனவும் அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னர் பாஜகவோடு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து கூட்டணி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச ஓபிஎஸ்-ஐ பாஜக தலைமை அழைக்காததால் அவர் விரக்தியடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி