ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு.. தந்தையை கொன்ற மகன்

80பார்த்தது
ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு.. தந்தையை கொன்ற மகன்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்லால் சர்மா. இவரது மகன் அஜித் (23), தனது நண்பனான கிருஷ்ணா (20) என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்துள்ளார். இது மோகன்லாலுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார். அதனையும் மீறி ஒரு நாள் இருவரும் தனிமையில் இருந்தபோது மோகன்லால் அதனை பார்த்துவிட்டு இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் மற்றும் கிருஷ்ணா தங்களது நண்பர்கள் 2 பேரை இணைத்துக்கொண்டு மோகன்லாலை மண்வெட்டியால் அடித்துக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி