ஜீப் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு.. (வீடியோ)

52பார்த்தது
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த மே 13ஆம் தேதி புல் பாயின்ட் பகுதிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது, நடுரோட்டில் திடீரென ஜீப்பின் டயர் கழன்று ஓடியது. உடனே ஜீப் சாலையில் சாய்ந்து நின்றது. கழன்று ஓடிய டயர் சாலையோர பேரிகார்டில் மோதி மறுபுறம் சென்று விழுந்தது. அப்போது, ​​எதிரே வேறு வாகனம் வராததால், ஜீப்பும் குறைந்த வேகத்தில் சென்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.