புதுக்கோட்டையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரியில் 2024-25 ஆண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. தொழிற்ப் பிரிவுகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு 14-40 வயது வரம்பு. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இங்கு சேரும் மாணவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.750 தமிழ் புதல்வன் திட்டத்தில் கீழ் ரூ.1,000-ம் வழங்கப்படும். 100% வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். 31-12-2024 வரை விண்ணப்பிக்கலாம்.