சமையலறைப் பொருட்களில் மிக முக்கியமாக விளங்கும் பூண்டு தற்போது வரலாறு காணாத வகையில் விலை உயர்வை அடைந்துள்ளது. ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 - ரூ.550 வரை விற்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களிலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம். கடந்த ஆண்டில் தக்காளி விலை ரூ.250 வரை விற்கப்பட்டு மக்களை வாட்டி வதைத்தது. தற்போது, பூண்டு விலையால் மக்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், வெங்காயத்தின் விலையும் வரும்காலங்களில் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவை தேர்தல், குளிர்காலத்தில் குறைந்த வெங்காய உற்பத்தி, டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் விலை உயரும் என கூறப்படுகிறது.