வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயரும்

69பார்த்தது
வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயரும்
நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்களின் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என தெரியவந்துள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை 2023-24 ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெங்காய உற்பத்தி 15 சதவீதமும், உருளைக்கிழங்கு உற்பத்தி 2 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.