கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளி வரை எரிவாயு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும் குழாய் பதிப்பு பணி துவங்க உள்ளதை முன்னிட்டு, விவசாயிகளின் போராட்டம் விரிவடைந்து வருகிறது. பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.