திருச்சியை சேர்ந்த பவித்ராவுக்கு (42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விவாகரத்து ஆன நிலையில், ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நாதக பிரமுகரான இளங்கோ என்ற ஜானி 4 மாதங்களுக்கு முன் பவித்ராவுடன் துபாயில் தங்கியிருந்த போது, அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, உன் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்துவிடு, இல்லாவிட்டால் உனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். பவித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.