மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்து வரும் நிர்மலா சீதாராமன், "2 மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது. மக்களின் மனங்களில் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை விதைத்து வருகின்றன. வேலைவாய்ப்பின்மை 6.8% லிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.