‘கொத்துப் பரோட்டா இல்லையா?’.. ஹோட்டலை சூறையாடிய போதை ஆசாமிகள்

547பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் வண்டிக்கார தெருவில் இயங்கி வரும் ஹோட்டலில், நேற்றிரவு (பிப்.,6) இளைஞர்கள் சிலர் போதையில் சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள், கொத்துப் பரோட்டா கேட்ட நிலையில், கடை ஊழியர்கள் இல்லை என கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், உருட்டுக் கட்டைகளை எடுத்து ஊழியர்கள் மட்டும் கடை பொருட்களை அடித்து சூறையாடினர். இதில், ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி