மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். சருமப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் மாதுளைப் பொடியைப் பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வந்தால் முகம் பொலிவு பெறும். பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஃபிரஸ்ஸான மாதுளை தோலினை இடித்து சாறெடுத்து 50 மில்லி அளவு குடித்து வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறைவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு ரிவர்ஸ் செய்வதற்கு இந்த மாதுளை தோல் பயனுள்ளதாக இருக்கும்.
இரவு தூங்கும்முன் குடித்தால் அதிகாலை நேர சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதுளை பொடியில் மிக அதிக அளவு ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இவை காது கேளாமை பிரச்சினையை சரிசெய்யும். மாதுளையின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வந்தால் அது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்கும்.