மோடி மீது நடவடிக்கை கிடையாதா? நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி

555பார்த்தது
மோடி மீது நடவடிக்கை கிடையாதா? நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி
தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து நேற்று (மார்ச் 16) மதியம் 3 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில், இந்திய தேர்தல் ஆணையரிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசும் மோடி மற்றும் அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என செய்தியாளர் ஒருவர் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையர் பதிலளிக்காமல் அடுத்த கேள்விக்கு கடந்து சென்றார்.

தொடர்புடைய செய்தி