பெர்சிமன்' பழ சீசன் தொடங்கியுள்ளன

54பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் பேரிக்காய், ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில்,   ஆதாம் ஏவால் பழம் என்று அழைக்கப்படும் அரியவகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளது இம்மரங்களில் தற்போது பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்குகின்றன.   இந்த பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகும்  தக்காளி போன்ற தோற்றத்தைக் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் ஏ, பி சத்துகள் நிறைந்துள்ளன. இப்பழங்கள் மற்ற பழங்களைப் போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை எத்தனால் என்ற திரவத்தில் ஊறவைத்து  இரண்டு நாள்கள் கழித்துதான் சாப்பிட. முடியும். தென் இந்திய அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும்தான் இப்பழ மரங்கள் உள்ளன.
இப்பழங்கள் தற்போது  கிலோ ரூ. 170 முதல் 200  வரை சிம்ஸ் பூங்காவில்  விற்கப்படுகின்றன. இதன் நாற்றுகளும் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் வாசிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி