கெத்தை பேருந்து பிரச்னை: அதிகாரி உறுதி

553பார்த்தது
கெத்தை பேருந்து பிரச்னை: அதிகாரி உறுதி
கெத்தை - ஊட்டி வழித்தட பேருந்து காலை, 7: 30 மணிக்கு மஞ்சூரில் புறப்படுகிறது. அரசு, தனியார், கட்டட வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணிக் கின்றனர். காலை, 10: 30 மணிக்கு ஊட்டியில் புறப்படும் போது, குந்தா தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு தேவைக்கு மக்கள் வருகின்றனர். 2: 30 மணிக்கு மீண்டும் ஊட்டியில் புறப்படும் போது, முதல் 'ஷிப்ட்' கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்றனர்.

மாலை, 4: 30 மணிக்கு மஞ்சூரில் புறப்படும் போது பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பயணிக்கின்றனர். மாலை, 6: 30 மணிக்கு ஊட்டியில் புறப்படும் போது காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் இதே பஸ்சில் மீண்டும் மஞ்சூருக்கு வருகின்றனர். அதிக கலெக்ஷன் தரும் இந்த பஸ்சை பல்வேறு காரணங்களால் அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறிப்பாக, மஞ்சூர் வழித்தட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொது மேலாளர் நடராஜன் கூறுகையில், "கெத்தை பேருந்து பிரச்னை குறித்து பொது மக்கள், மூலம் புகார் வந்துள்ளது. இனி முறையாக இயக்கப்படும், " என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி