தீர்வு காணும் வகையில் இலவச முகாம்

51பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குவது மற்றும் திறந்த தொடர்பு மற்றும் கலந்துரையாடலுக்கான தளத்தை உருவாக்குவது உள்ளிட்டவை இன்று வங்கியின் தலைமை மேலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தலைமை மேலாளர், வங்கியின் முக்கிய நோக்கமாக தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய ஆழமான தகவலை வழங்குவது சிறந்த தொடர்பு மற்றும்
இம்முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மேலாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரோட்டரி நீலகிரி மேற்கு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியோர் இணைந்து ஓய்வூதியதாரர்களுக்கு மகா இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட கோட்டாட்சியர் மகாராஜா மற்றும் உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் இருதய பரிசோதனை நிபுணர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் இருதயம் மற்றும் பொது முக்கிய நோய்களுக்கு இம்முகாமில் இலவச பரிசோதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி