உதகை நகராட்சிக்குட்பட்ட பெண் நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் புறக்கணிப்பதாக கூறி திமுகவை சேர்ந்த 9 பெண் நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் மாதாந்திர நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நகரமன்ற கூட்டத்தில் 36 வார்டுகளை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்
மேலும் இக்கூட்டத்தில் திமுகவை சேர்ந்த பெண் நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கழிப்பிட வசதி நடைபாதை, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் நாங்கள் பெண் நகர மன்ற உறுப்பினர்கள் என்று எங்களை புறக்கணிப்பதாகவும்
தங்கள் வாடுகளுக்கு இதுவரை எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும்
பெண்களுக்கென 50 சதவீதம் ஒப்பந்தம் பணிகள் செய்து தர வேண்டும் என உள்ளது ஆனால் பெண் நகராட்சி உறுப்பினர்களை அலட்சியமாக நகராட்சி நிர்வாகம் நடத்துவதாக கூறி இன்று நடைபெற்ற கூட்டத்திலிருந்து திமுகவை சேர்ந்த ஒன்பது நகர மன்ற பெண் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.