திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருது

63பார்த்தது
திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருது
திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருதை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கலெக்டர் அருணா அறிக்கை: திருநங்கையர்கள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப் புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகள் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகை யில், திருநங்கையர் தினம் அறிவிக்கப்பட்ட ஏப். , 15ல், 2023-24ம் ஆண்டுக்கான திருநங்கை யர்களுக்கான முன்மாதிரி விருதாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன், சான்று வழங்கப் படுகிறது. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது, ஐந்து திருநங் கையர்கள் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும்.
திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பி இருக்கக்கூடாது. தகுதியான திருநங் கையர்கள் தமிழக அரசின் விருதுகள் என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி