பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

50பார்த்தது
பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோத்தகிரி நேரு பூங்கா கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில், பூங்காவில் மலர் சாகுபடி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலவிதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்கள், ரோஜா, சாமந்திப்பூ, காட்டு மல்லி போன்ற பல வித பூக்களை நடவு செய்யப்பட்டு தற்போது கோடை சீசனுக்காக தயார் நிலையில் இருந்து வருகிறது. கடந்த வாரம் ரம்ஜான் விடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறைகள் தற்போது விடப்பட்டுள்ள நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குவிந்து பகல் நேரங்களில் நிலவும் வெயிலை சமாளித்து இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் சுற்றுலா அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுத்தும், சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி தங்கள் சந்தோஷங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாரல் மழையும், பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் கால சூழ்நிலை குளு குளுவென காற்றுடன் கூடிய இதமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி