மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு, புத்தகங்கள் வழங்கி வரவேற்பு

74பார்த்தது
மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு, புத்தகங்கள் வழங்கி வரவேற்பு
கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள குங்குர்மூலா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுனில் தலைமை வகித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் அரசின் இலவச பாட புத்தகங்களை வழங்கினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) ராஜம்மாள், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜமால் முகமது, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மினிமோள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி