நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் இன்று (செப்.,08) ஞாயிற்றுக்கிழமை ஆகிய தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ராக் பில்லர் மற்றும் மலைமுகடுகளில் இருந்து வரும் அருவிகள் தெங்கு மராடா காட்சிகள் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளை கோடநாடு பகுதியில் இருந்து கண்டு ரசித்து வருகின்றனர் மேலும் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.