கோடநாடு எஸ்டேட்டில் அதிகாரிகள் மண் ஆய்வு

1545பார்த்தது
கோடநாடு எஸ்டேட்டில் அதிகாரிகள் மண் ஆய்வு
கோத்தகிரி அருகே முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயல லிதா மற்றும் அவரது தோழிக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாதம் கோடநாடு எஸ்டேட்டிற்கு வந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எஸ்டேட் வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு உருவச் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டப்படும் என தெரிவித்து அதற்கான பூமி பூஜையில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பினார்.

உருவச் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டுவதற்கு என ஒதுக்கப் பட்ட இடத்தில் உள்ள மண் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற தரத்தில் உள்ளதா? என கண்டறிய நேற்று அதிகாரிகள் எஸ்டேட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த மண்ணின் மாதிரியை சோதனைக்காக கொண்டுச் சென்றதாகவும் தெரிகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜெயல்லிதாவுக்கு உருவச் சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டி பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும் என சசிகலா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி