சிறுத்தை இறப்பு வனத்துறை விசாரணை

53பார்த்தது
சிறுத்தை இறப்பு வனத்துறை விசாரணை
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திசால் சாலையோரத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வன காப்பாளர்கள் ஆண்டனி ராபின், குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 6 வயது ஆண் சிறுத்தை முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி சேரம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி