கண் பரிசோதனை முகாம்

59பார்த்தது
கண் பரிசோதனை முகாம்
சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி கோத்தகிரி காவல்துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. முகாமை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதி, ஜெயமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர் ரோஹன் தலைமையிலான குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் போலீசார், டாக்சி, ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி