மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆய்வு

76பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வரும் நிலையில் பரளியார் கேஎன்ஆர் இடையே சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் யானை வழித்தடங்கள் உள்ளதால் மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் வனவர் ராஜ்குமார் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் காட்டு யானைகள் செல்லும் வழியில் தடுப்புச் சுவர்கள் அமைக்க கூடாது என்றும் யானை வழித்தடம் அடைக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் கௌதம் தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜாவிடம் தெரிவித்தார் மேலும் பணி நடைபெறும் இடங்களில் பணி குறித்து பேனர்கள் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் சாலை விரிவாக்க பணியின் போது அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி