கோயம்புத்தூர் - Coimbatore

வால்பாறை: குளிர்வித்த மழையால் சுற்றுலா பயணியர் குஷி

வால்பாறை: குளிர்வித்த மழையால் சுற்றுலா பயணியர் குஷி

வால்பாறையை பெய்யும் மழையால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவுகிறது. இதனால், தேயிலை செடிகள் துளிர்விட்டு, பச்சைப்பசேல் என காணப்படுகிறது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில் மழையும், வெயிலும் மாறிமாறி நிலவுவதாலும், காலை, மாலை நேரங்களில் நிலவும் பனிமூட்டத்தாலும், சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பருவமழைக்கு பின் குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் வருகையும் இன்று அதிகரித்துள்ளது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்