வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய தேர்தல் சபை அண்மையில் அறிவித்துள்ளது. அவர் 51 சதவீத வாக்குகள் பெற்றதாக கூறப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் 44 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் டோக்கியோவில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 'உறுதிப்படுத்தப்படாத எந்த முடிவையும் எங்களால் அங்கீகரிக்க முடியாது' என்றார்.