30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - பலர் கவலைக்கிடம்

58பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இன்று (மே 24) பயங்கர பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காட் ரோட்டில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் பயத்தில் அலறினர். இதனைப் பார்த்த சுற்றுவட்டார கிராம மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி