ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து

50பார்த்தது
ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், 75 ரன்களில் ஆல் அவுட் ஆன நியூசிலாந்து அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆப்கான் அணியின் கேப்டன் ரஷீத் கான், ஃபசல்ஹக் ஃபாரூக்கி தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்; நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி