நீட் தேர்வு முறைகேடு: இன்று காங்கிரஸ் போராட்டம்!

76பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு: இன்று காங்கிரஸ் போராட்டம்!
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக இன்று (ஜூன் 21) நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை விசாரித்து, தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதே போல் வருகிற 24ஆம் தேதி சென்னையில் திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி