கொசுவை ஒழிக்க கொசுவத்தி, லிக்விடேட்டர், க்ரீம், கொசு மருந்து எனப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. ஆனால், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரே ஒரு கொசு மருந்து வேப்பிலைதான். வேப்பிலைகளைத் தீயிட்டுக் கொளுத்த அதில் இருந்து எழும் புகையில் கொசுக்கள் அனைத்தும் செத்து மடியும். இதன்மூலம் மலேரியா, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தடுக்கலாம்.