தேசிய பேரழிவு கூட்டணி - அமைச்சர் விமர்சனம்

71பார்த்தது
தேசிய பேரழிவு கூட்டணி - அமைச்சர் விமர்சனம்
பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அல்ல, தேசிய பேரழிவு கூட்டணி என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது எக்ஸ் பதிவில், நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை துறை ஆகிய ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் தங்களது சாதகமாக்கி அதன் ஆணிவேரில் விஷத்தை பாய்ச்சியுள்ளது பாஜக. 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவை எப்படியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. இந்த வீழ்ச்சிகள் யாவும், இது தேசிய ஜனநாயக கூட்டணி அல்ல; தேசிய பேரழிவு கூட்டணி [National Disastrous Alliance] என்பதை கண்ணாடி போல படம்பிடித்து காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி