திருச்செங்கோடு: கரும்பில் வெள்ளைப்பூச்சி தாக்குதல்

57பார்த்தது
திருச்செங்கோடு: கரும்பில் வெள்ளைப்பூச்சி தாக்குதல்
திருச்செங்கோடு தாலுகா, கொல்லப்பட்டி பாலியக்காட்டில் பயிர் செய்யப்பட்டுள்ள 10015 என்ற புதிய வகை கரும்பில், முளைப்பிலேயே பூச்சி தாக்குவதால், குருத்திலேயே இறந்து வருகிறது. வெள்ளைப்பூச்சி தாக்குதல் 7 மாதத்திற்கு பிறகு கரும்பு சோகையில் அடிப்பகுதியில் வரும்.

ஆனால், தற்போது சிறு கரும்பிலேயே தாக்குதல் ஏற்பட்டு கரும்பை வளர விடாமல் தூர்கள் முழுவதும் கருகிப்போகும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி