திருச்செங்கோடு: திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு

1057பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி. கைலாசம்பாளையம், அப்பூர்பாளையம், நெய்க்காரப்பட்டி, தி. புதுப்பாளையம், கோட்டபாளையம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கொமதேக மேற்கு மாவட்ட கழக செயலாளர் நதி ராஜவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி