நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள, கைலாசம்பாளையம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் கூட்டுறவு துறை, வீட்டு வசதி மற்றும் நகரப்புற மேம்பாடு, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டு முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.