மூன்று பேருக்கு கத்திக்குத்து: தாய், மகன் கைது

80பார்த்தது
மூன்று பேருக்கு கத்திக்குத்து: தாய், மகன் கைது
சத்திநாயக்கன்பாளையம் பால் சங்கம் அருகில் உள்ள குடித் தெருவைச் சோ்ந்த சண்முகம் - சம்பூா்ணம் ஆகியோரின் மூத்த மகன் செந்தில்குமாா் அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிரபு என்பவரின் மகள் 10 வயது சிறுமியைக் கத்தியால் வெட்டியுள்ளாா். குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோா் செந்தில்குமாரைப் பிடிக்க போது அவா்களையும் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் சிறுமி ஆபத்தான நிலையில் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, செந்தில் குமாா் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக குடும்பத்தினா் தெரிவித்ததை அடுத்து காயமடைந்தவா்களின் குடும்பத்தினா் செந்தில்குமாரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் தாய், மகன் என இருவா் மீதும் கொலை முயற்சி, குற்றத்தை மறைத்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதனையடுத்து செந்தில்குமாா், சம்பூரணம் ஆகியோா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தொடர்புடைய செய்தி