திருச்சங்கோடு: கலை இலக்கியப் போட்டிகள்

51பார்த்தது
திருச்சங்கோடு: கலை இலக்கியப் போட்டிகள்
தமிழக அரசின் சார்பாக மாவட்டம் தோறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்படும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கலை இலக்கியப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழா திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழா திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்களின் தலைமையில் சிறப்பாக தொடங்கியது.

இந்த நிகழ்விற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர்
மு. கருணாநிதி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா முன்னிலை வகித்தார்.

நிகழ்வினை ஒருங்கிணைத்த தமிழ்த்துறை தலைவர் முனைவர் ம. கவிதா வரவேற்புரை வழங்கினார். மாணவப் பேரவை மன்றத் செல்வி ஸ்வேதா நன்றியுரை வழங்கினார்.

தொடக்க விழாவினை தொடர்ந்து மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி வினாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் இப்போட்டிகளில் ஆர்வமுடன் அனைவரும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி