நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயசரவணன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல் மாவட்டத்திற்கு மார்ச் மாதம் வருகை தருவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.