பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் நில அளவை பணி தொடக்கம்

61பார்த்தது
பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் நில அளவை பணி தொடக்கம்
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் புதிதாக புகா் பேருந்து நிலையம் அமைவிடத்திற்கான நிலத்தை அளவீடு செய்து ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புகா் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடா்ந்து திருச்செங்கோட்டில் புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் மண்கரடு மேடு பகுதியில் பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 19 ஏக்கா் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க ஏதுவான பகுதிகள் குறித்தும், பேருந்து நிலையத்தை பிரதான சாலைகளில் இணைப்பது குறித்தும், பேருந்துகள் வந்து சொல்லும் சாலை பாதையை தோ்வு செய்யவும் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த பணியின்போது திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, மாவட்ட அளவையாளா் சித்ரா, நகராட்சி நில அளவையா் பூபதி, வட்டாட்சியா் விஜயகாந்த், நகராட்சிப் பொறியாளா் சரவணன், நகர அமைப்பு அலுவலா் ஸ்ரீதா், நகரமைப்பு ஆய்வாளா் செல்வம், மண்டகப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் விமலாதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி